குடும்பத்துடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற ‘ஜில்லுனு ஒரு காதல்’ ஜோடி..!!

சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமலிருந்து வந்த இவர் 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார். ஜோதிகாவிற்கு அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கும் காதல்: தி கோர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில்…

மேலும் படிக்க

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை அணுகும் மாணவர்களிடம் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை…

மேலும் படிக்க

காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார். இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள்…

மேலும் படிக்க

மீஞ்சூரில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்..!!

மீஞ்சூர் பஜார் வழியாக செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அருகில் கவுதம் (வயது 76) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் இந்நிலையில் நேற்று காலை மரக்கடைக்குள் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. கட்டுக்கடங்காத தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் வந்த வடசென்னை அனல் தீயணைப்புத்துறையினர்…

மேலும் படிக்க

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்த தடை..!!

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- செல்போன் பயன்படுத்தக்கூடாது * காவலர்கள் முக்கியமான வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருக்கும்போதும், விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும்போதும் செல்போன்களை பயன்படுத்த அனுமதி இல்லை. * மேற்கண்ட சமயத்தில் செல்போன்களை…

மேலும் படிக்க

மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டவர்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த காஜா மைதீன் ஷேக் (வயது 55) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவர் மீது 2019-ம் ஆண்டு ஐதராபாத் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து உள்ளதும், கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த காஜா…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து 75.80-க்கு விற்பனை…

மேலும் படிக்க

SUB-INSPECTOR போல் நடித்து பணம் பறிக்க முயன்ற !

ஈரோடு பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. அவருடைய மகன் சதாம் உசேன் (வயது 27). இவர் நேற்று காலை 8 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில், விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சதாம் உசேனை திடீரென தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர் சதாம்…

மேலும் படிக்க

அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது….

மேலும் படிக்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில், அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசியது. தொடர்ந்து பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram