கிருஷ்ணகிரி : பட்டாசு குடோனில் வெடிவிபத்து..!!

குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் குடோனுக்கு அருகே உள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சில வீடுகளும் சேதமடைந்தன.படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். NEWS EDITOR…

மேலும் படிக்க

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் ~ வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!!

இந்திய செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய முன்வருமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ‘செமிகான் இந்தியா மாநாடு 2023’ என்ற பெயரில் செமிகண்டக்டர் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், சந்திரசேகர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மைக்ரோன் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், SEMI, AMD போன்ற செமிகண்டக்டர் துறையின் முக்கிய…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 28) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை ரூ.2.00 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை : அன்புமணி கைது..!!

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. “மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில்…

மேலும் படிக்க

உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்

நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அவ்வாறு அவர் பேசிய வீடியோக்கள் யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. கைலாசா என்றால் என்ன? என்பது பற்றியும், நித்யானந்தா பற்றியும் அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ரஞ்சிதா பேசியதாவது:- கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது….

மேலும் படிக்க

கோடநாடு கொலை; கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை…

மேலும் படிக்க

விரைவில் ‘மரகத நாணயம் 2’ ~ உறுதி செய்த இயக்குநர்..!!

 ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாயணம்’. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்து இன்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.அடுத்து…

மேலும் படிக்க

“விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுமுறை”~ சிக்கிம்..!!

சிக்கிம் மாநில முதல் மந்திரியான பிரேம் சிங் தமாங், நேற்று அம்மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்துகொண்டார். அரசு ஊழியர்கள் தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள இது உதவும் என்றும் இச்சட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரேம் சிங் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் எனவும், தந்தைகளுக்கு…

மேலும் படிக்க

இது இந்தியாவில் தான்..!! ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற தம்பதி..!!

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தை செய்து உள்ளனர். தாயார் குழந்தையை விற்று பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.அதிர்ச்சியூட்டும் வகையில் முதலில் ஏழு வயது…

மேலும் படிக்க

4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை

கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டியும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தபடி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்களுடைய யாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி பகுதியில் இருந்து தொடங்கியது. இந்தநிலையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு வந்தனர். வந்தவாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram