தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!
இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளையை தொடங்க உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் காமகோடி அறிவிப்பு வெளியிட்டார். ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை அயல்நாட்டில் தொடங்க…