பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரான முதல் முஸ்லிம் பெண்..!!

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அஸிமா பானு பெங்களூரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரான முதல் முஸ்லிம் பெண் இவராவார். கடந்த 23 வருடமாக பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய நிலையில் தற்போது இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். தனது இளநிலை மருத்துவ படிப்பை பெங்களூர் அரசு மருத்துகல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 1990-ம் ஆண்டு தொடங்கினார். 2000ம் ஆண்டு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றார். கல்லூரிப் படிப்பை…

மேலும் படிக்க

“சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” ~ இசையின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ‘ஏ.ஆர்.ரஹ்மான்’..!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மலேஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளரான செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”2015-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்போது  திடீரென்று  என் நண்பரிடம் இருந்து எனக்கு மெசெஜ் வந்தது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கேட்க வேண்டும். கண்டிப்பாக உனக்கு பிடிக்கும் என தெரிவித்திருந்தார். அந்த பாடல் ஓகே கண்மணி படத்தில் இடம்…

மேலும் படிக்க

உணவு வகையில் ‘நோ தக்காளி’ : விலை உயர்வால் அறிவிப்பு வெளியிட்ட ‘மெக்டொனால்ட்ஸ்’..!!

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக  உயர்ந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம்  கங்கோத்ரி தாம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில் ரூ. 180 முதல் 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ₹100 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி  ₹60-க்கு சலுகை விலையில் விற்கப்படுகிறது. இந்நிலையில்  துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ்…

மேலும் படிக்க

‘மாமன்னன்’ படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு நன்றி – உதயநிதி ஸ்டாலின் டுவீட்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல…

மேலும் படிக்க

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!!

தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்! லண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக் கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ‘திராவிடமணி’…

மேலும் படிக்க

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து..!!

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் வந்துகொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கினர். இந்த ரெயில் விபத்தில் தற்போதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள…

மேலும் படிக்க

டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை – ஏடிஜிபி அருண்..!!

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்த விஜயகுமார், வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டு வளாகத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடந்தார். திடீரென தனது பாதுகாவலர் ரவி வைத்திருந்த கை துப்பாக்கியை விஜயகுமார் கேட்டார். உயர் அதிகாரி கேட்பதால் பாதுகாவலரும் எந்த கேள்வியும் கேட்காமல் துப்பாக்கியை கொடுத்தார். விஜயகுமார் வீட்டுக்குள் துப்பாக்கியை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது….

மேலும் படிக்க

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 08-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்….

மேலும் படிக்க

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட்-உடன் இணைந்து தமிழ்நாடு கல்வித்துறை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சர் அன்பில்…

மேலும் படிக்க

என்றென்றும் தல தோனி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்றென்றும் சி.எஸ்.கே.வின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்கள் சாதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் சாதனைகள் எண்ணற்ற…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram