மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! சவரனுக்கு இன்று ரூ.304 அதிகரிப்பு..!!

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம் ரூ.5,457 ஆகவும், சவரன் ரூ.43,656 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.5,495-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.43,960 ஆக இருந்தது. இதேபோல வெள்ளியின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்தது. இன்று காலை…

மேலும் படிக்க

களிமண்ணில் “ரஜினியின் லால் சலாம்” உருவத்தை செய்து அசத்திய இளைஞர்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகர். இவரது தந்தை மந்தராசலம் களிமண் சிற்பம் தயாரிப்பவர். இதனால்  தனது விருப்ப நடிகரான ரஜினியின் உருவத்தை  முதன் முதலில் சிற்பமாக செய்து பழகி வந்துள்ளார். பின்னர் ஏராளமான ரஜினி பொம்மைகளை செய்து களிமண் உருவ சிற்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்பொழுது மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். என்றாலும் அவ்வப்பொழுது ரஜினியின் சிலைகளை களிமண்ணால் செய்து…

மேலும் படிக்க

மும்பையில் தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்த நடிகை..!!

 பிரபல நடிகை ‘சாரா அலிகான்’ தனது தோழியுடன் மும்பை கடற்கரையில்  உலா சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாரா கருப்பு  மற்றும் மஞ்சள் நிற ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து நடந்து செல்கிறார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான தன்யா கவ்ரி உடன் செல்கிறார். அவர்களை சிலர்  அடையாளம் கண்டதால் அவர்களுக்கு ஹாய் சொல்லியபடி நடந்து செல்கின்றனர்.  பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கின்றனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்..!!

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்கலைகழகத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை, விதவிதமான ஆடைகளுடன் தோன்றுதல், வாட் ஆப்பில் பதில் அனுப்புதல், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் AI ன் உதவியுடன் ஆச்சரிப்பட தக்க வகையில் புதிய சாதனைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்…

மேலும் படிக்க

அப்பளம் போல் சரிந்த அடுக்குமாடி கட்டடம்..!!

வடகிழக்கு பெர்னாம்புகோ மாநிலம் ரெசிஃபி புறநகரில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று காலை  காலை 6 மணி அளவில்  திடீரென இடிந்து அப்பளம் போல் சரிந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 பேர்  உயிரிழந்தனர்.  இதில் இரு சிறுவர்களும் அடக்கம். கட்டிட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரெசிஃபி  நகரில் கடந்த சில…

மேலும் படிக்க

50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த லியோ படத்தின் பாடல்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து…

மேலும் படிக்க

தக்காளி விலை மீண்டும் உயர்வு..!!

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்து கொண்டே வந்ததால் இந்த விலை ஏற்றம் என கூறப்பட்டு வந்தது,. இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகமானதால் நேற்று தக்காளி விலை 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு…

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு வரும் 12ம் தேதி துவங்குகிறது..!!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு ஜூலை 12ம் தேதி துவங்குகிறது என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவர். அவர்கள் பஸ், ரெயில் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான…

மேலும் படிக்க

மணிப்பூரில் தொடரும் கலவரம்..!!போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு..!!

மணிப்பூரில் மெஜாரிட்டியாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 120 பேர் உயிரிழந்தும், 3 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட…

மேலும் படிக்க

கிழக்கு லடாக் பிரிவில் புதிதாக இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் சேர்ப்பு..!!

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் உடன்பாடு ஏற்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டி உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. எனினும், எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்ந்து பதற்ற நிலையையே நீடிக்க…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram