திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆசிரியர் நகர் 2-வது தெருவில் வசித்து வந்தவர் ஆரோக்கியசாமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். அவரது இறப்பை தாங்க முடியாத அவரது மனைவி லட்சுமி (58) மிகுந்த மனவருத்தத்துடன் இருந்து வந்தார். நேற்று மாலை அவரது வீட்டின் 3-வது மாடியில் இருந்து லட்சுமி கீழே குதித்தார். அப்போது வீட்டின் எதிரே இருந்த கேட்டில் லட்சுமி சிக்கிய படி ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே…

மேலும் படிக்க

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் சில நாட்கள் விலையேற்றம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. பிற காய்கறிகளின் விலை அதே நிலையில்தான் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்த விலை குறித்து காய்கறி வணிகர் சங்க தலைவர் வாசு கூறுகையில், ”வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்து…

மேலும் படிக்க

ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்கினால் நடவடிக்கை..!!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியனரிடம் அதிகாரிகள் வழங்கக்கூடாது என கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்திட சிறப்பு முகாம் நடத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறும் விதமாக தகுதி உள்ள பயனாளிகளை தேர்வு செய்ய முதற்கட்ட முகாம்…

மேலும் படிக்க

காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை ~ மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!!

மதுரையில் காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்….

மேலும் படிக்க

பத்திரப்பதிவுசேவை கட்டணம் உயர்வு..!!

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரபதிவு துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுளள்து. ஜுலை 10 ஆம் தேதி முதல் அணைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டர் காயங்களுடன் பிணமாக மீட்பு..!!

பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் (வயது 65) என்பவர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் தலையில் ரத்த காயங்களுடன் ஜோசப் மயங்கி கிடந்தார். இதை கண்ட…

மேலும் படிக்க

தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை..!!

வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது. நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத்…

மேலும் படிக்க

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 9 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்வு..!!

தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் தெலுங்கானாவின் வாரங்கால் நகருக்கு சென்றடைந்து உள்ளார். அதன்பின், நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, நடந்த பல்வேறு திட்ட தொடக்க நிகழ்ச்சிகளை இன்று தொடங்கி வைத்து உள்ளார். ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டியுள்ளார். இதில், நெடுஞ்சாலைகள் முதல் ரெயில்வே வரையிலான வெவ்வேறு பிரிவுகளுக்கான பணிகளும் அடங்கும். இதனால், தெலுங்கானா மக்கள் பயனடைவார்கள்…

மேலும் படிக்க

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்..!!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தால், அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். NEWS…

மேலும் படிக்க

‘வந்தே பாரத்’ உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு..!!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வந்தே பாரத் ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘வந்தே பாரத்’ உள்ளிட்ட சில ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. NEWS…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram