பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக் கட்டண உயர்வு

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன….

மேலும் படிக்க

ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்..!!

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும். அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம். ஆளுநர் வெறும் நியமன…

மேலும் படிக்க

டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்த திரிஷா..!!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திரிஷா தற்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. த ரோடு படமும்…

மேலும் படிக்க

எல்.ஜி.எம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோனி..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர்…

மேலும் படிக்க

பெருங்குடியில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்..!!

சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் உள்ள மாடி வீட்டில் பெண் ஒருவர் தனது 20 மற்றும் 18 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் அந்த பெண்ணின் தாயாரும் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தனது மூத்த மகளுடன் ஓட்டு வீட்டிலும், அவருடைய இளைய மகள், பாட்டியுடன் அருகில் உள்ள கூரை வீட்டிலும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது….

மேலும் படிக்க

காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு..!!

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும், செவிலிமேடு பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தமூர்த்தி நகர் பூங்காவையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நாகலுத்து மேடு பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட…

மேலும் படிக்க

மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் நிர்மலா புச் காலமானார்..!!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளருமான நிர்மலா புச், வயது முதிவு தொடர்பான நோயால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 90 வயது நிரம்பிய அவர்1960-பேட்ச் அதிகாரி என்று அவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

ஜவான் டிரெய்லரை வெளியிடும் நடிகர் விஜய்..!!

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்.7 ஆம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி விற்பனை , இசை…

மேலும் படிக்க

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி..!!

திருப்பத்தூர் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு நேற்று முன் தினம் இரவு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் ேநாக்கில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால் முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை அங்கு சென்றவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் சேதமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அந்த…

மேலும் படிக்க

நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரெயில்..!!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் விரைவு ரெயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் என தெரிவிக்கப்ட்டுள்ளது. நிறம் மாற்றம் செய்யப்பட்ட ரெயிலை மத்திய ரயில்வேத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று மாலை பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram