உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில்,…

மேலும் படிக்க

வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்கள்..!! டெல்லியில் வரலாறு காணாத மழை..!!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நிலச்சர்வு காரணமாக சாலைகள் துண்டிக்ப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது….

மேலும் படிக்க

வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை..!!

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டின் 2-வது மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் வீட்டின் வாசல் முன்பு அட்டை பெட்டியில் செருப்புகளை அடுக்கி வைப்பது வழக்கம். இது தொடர்பாக வசந்திக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் குமார்(52) என்ற மீனவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி வீட்டு வாசலில்…

மேலும் படிக்க

நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு..!!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரசு சார்பில் விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க உள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு…

மேலும் படிக்க

மேற்கு வங்காளம் : தேர்தல் வன்முறைக்கு 20 பேர் பலி..!! சாக்கடையில் வீசப்பட்ட வாக்கு இயந்திரங்கள்..!!

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது. இன்று காலை 7…

மேலும் படிக்க

விவசாயிகளுடன் திடீர் சந்திப்பு : ராகுல் காந்தியின் செயல் நகைப்புக்குரியது~அசாம் முதல்-மந்திரி தாக்கு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அரியானாவில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை திடீரென சந்தித்தார். அவர்களுடன் நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி சில மணித்துளிகளை செலவிட்டார். இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தன. ஆனால் ராகுல் காந்தியின் இந்த செயலை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இளவரசரின் (ராகுல் காந்தி) இந்த திடீர் ஆசையும், விரக்தியும்…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி என்ன புத்தரா..?? ~ அண்ணாமலை..!!

செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க கவர்னரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு கவர்னரை சீண்டிப் பார்க்கிறது. கவர்னரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது. தமிழகத்தில் கவர்னருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கூறுவதை கவர்னர் அப்படியே ஓப்பிக்க வேண்டுமா?. கவர்னர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன். தமிழ்நாடு அரசு கவர்னரை…

மேலும் படிக்க

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்..!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடி மதிப்பிலான 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 18 மாத காலத்தில்… டாக்டர் தாமஸ் சாலை திட்ட பகுதியில்…

மேலும் படிக்க

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கைதான 15 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது…

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. அதிகாலை 5.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram