லண்டனில் அனுஷ்கா விராட் ஜோடி..!!

விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா இணையத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பெரிய பை ஒன்றை தோளில் மாட்டிக்கொண்டு காபி குடித்தபடி மெட்ரோ ரயில் நிலையத்தில் சிரித்தபடி அனுஷ்கா நடந்து செல்கிறார். மற்றொரு வீடியோவில் கணவர் கோலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கறுப்பு கோட் வெள்ளை பேண்ட் அணிந்திருக்கும் கோலியை அனுஷ்கா செல்போனில் க்ளிக் செய்கிறார். பின்னர் இருவரும் சிரித்தபடி அங்கிருந்து செல்கின்றனர்….

மேலும் படிக்க

ஜவான் படத்தின் முன்னோட்டம் பற்றி ஏ.ஆர் ரகுமான்..!!

‘ஜவான்’ படத்தின்  முன்னோட்டத்தை (Prevue)இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி…

மேலும் படிக்க

உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு..!!

அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது, குறிப்பாக ரோபோக்களின் உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பொருத்தப்பட்ட ரோபோக்கள் பேசுவதைக் கேட்ட பிறகு, ஹாலிவுட்திரைப்படங்களின் கதைகள் உண்மையாகி இயந்திரங்கள் உலகை அடிமைப்படுத்தத் தொடங்குகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெனீவாவில் நடைபெற்ற உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற…

மேலும் படிக்க

“நான் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறேன்” வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தைப் பருவ புகைப்படம்..!!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சில பதிவுகளுக்கு அவர் என்ன ரியாக் ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் அவருக்கென்று உண்டு. அந்த வரிசையில் தற்போது “பேபி எலான்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள எலான் மஸ்க்கின் சிறுவயது புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள எதிர்வினை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. K10 என்ற பெயரில்…

மேலும் படிக்க

ஏ தள்ளு..!!தள்ளு..!! தள்ளு..!! நடுவழியில் நின்ற ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள்..!!

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு வகையான வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கும். பல வீடியோக்கள் மிகவும் வேடிக்கையானவை, சில சமயங்களில் சில வீடியோக்கள் நம்மை பெருமைப்படுத்துகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்துடன் தொடர்புடைய வீடியோக்கள் மீது மக்கள் மிகுந்த அன்பைப் பொழிகிறார்கள். இந்நிலையில் தற்போது இதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவை பார்த்ததும் சமூக வலைதளவாசிகள் அதிகம் விரும்பி வருகின்றனர். இந்த வைரலான வீடியோவில், தண்டவாளத்தில் ஒரு ரயில் நிற்பதைக் காணலாம்….

மேலும் படிக்க

10 ஆண்டுகள்.!! 15 பெண்கள்..! போலி டாக்டர்..!! சினிமா பாணியில் மோசடி செய்த ‘கல்யாண மன்னன்’..!!

தமிழில் ‘நான் அவன் இல்லை’ என்ற ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் ஜீவன் கதாநாயகனாக நடித்திருப்பார். அவர் அந்த படத்தில் பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள், பணத்தை அபேஸ் செய்து கொண்டு ஓடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அதுபோன்ற உண்மையான சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துள்ளது. இங்கு ஒரு வாலிபர் தான் டாக்டர், என்ஜினீயர், அரசு ஒப்பந்ததாரர் என்று பொய் சொல்லி 15 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து…

மேலும் படிக்க

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டம்..!!

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா…

மேலும் படிக்க

லடாக்கில் கனமழை..!! 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது..!!

டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி, டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில்…

மேலும் படிக்க

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கு தள்ளூபடி..!!

நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு…

மேலும் படிக்க

புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ரூ.80 க்கு விற்பனை..!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது. புதுக்கோடை மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ. 110…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram