ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை..!!

கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த நேபாள நாட்டு பயணி ஒருவர் திடீரென ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். இதுபற்றி அந்த விமானத்தின் மேற்பார்வையாளரான ஆதித்ய குமார், டெல்லி போலீசில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்து உள்ளார். அதில், மகேஷ் சிங் பண்டிட் என்ற நேபாள நாட்டை சேர்ந்த பயணி அவரது இருக்கையில் இருந்து வேறு இருக்கைக்கு சென்று உள்ளார்….

மேலும் படிக்க

ஜார்க்கண்டில் நெற்றியில் திலகம் வைத்ததற்காக பள்ளியில் அவமதிப்பு..!!மாணவி தற்கொலை..!!

ஜார்க்கண்டில் தன்பாத் நகரில் உள்ள அனுமன்கார்ஹி பகுதியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி உஷா குமாரி (வயது 17). இவர் நெற்றியில் திலகம் வைத்து பள்ளிக்கு சென்று உள்ளார். இதற்காக அந்த மாணவியை ஆசிரியை சிந்து அடித்து உள்ளார். மொத்த வகுப்புக்கு முன்பு அவரை அவமதிப்பு செய்து உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர்…

மேலும் படிக்க

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!!

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா…

மேலும் படிக்க

சிப்ஸ், பஜ்ஜி வாங்க சைரன் அடித்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..!!

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழியேற்படுத்தினார். அதன்பின்பு, ஆம்புலன்ஸ் சென்று உள்ளது. ஆனால், அந்த ஆம்புலன்ஸ் நேராக சாலையோரம் இருந்த உணவகம் ஒன்றின் முன் சென்று நின்று உள்ளது. அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. ஆனால், சைரன்…

மேலும் படிக்க

நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் காலமானார்..!!

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளார். பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்து உள்ளார். அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இன்று காலை 8.33 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மாரடைப்பால்…

மேலும் படிக்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான COUNSELING மற்றும் CERTIFICATE சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் வீதம் கலந்து கொள்வதற்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்…

மேலும் படிக்க

நடிகர் விஜய் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து

கடந்த ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப்பாளர்களுக்கான பாராட்டு விழா பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால்…

மேலும் படிக்க

அதிமுகவில் சேர மன்னிப்பு கடிதம் தந்தால் கட்சியில் சேரலாம் ~ எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும்; கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில்…

மேலும் படிக்க

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து : 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி..!!

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென மாயமானது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, காணாமல் போன நேபாள ஹெலிகாப்டரில் 5 மெக்ஸிகோ பயணிகள் மற்றும் விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரை, மூத்த விமானி சேட் பி குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில்…

மேலும் படிக்க

ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஆண்டில் கோடை வெயிலுக்கு 61,000 பேர் பலி..!!

உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்த 2022-ம் ஆண்டு கோடைக் காலத்தில் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த நிறுவனம் செய்த ஆய்வின் முடிவில், கோடை காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக ஜூலை 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram