சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானா..!!

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  நாட்டு கோழிகளை மர்ம நபர்கள் குறி வைத்து தொடர்ந்து திருடி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சேவல் திருட்டு விவகாரத்தில் பொதுமக்களிடம் பிடிபட்டார். கையும் களவுமாக பிடிபட்ட அந்த நபரை  நாட்டு சேவல் ஒன்றுடன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்காக அந்த நபரை சிறையில் அடைத்த போலீசார் அவர் திருடி…

மேலும் படிக்க

மொய்தீன் பாயாக “லால் சலாம்” படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சூப்பர் ஸ்டார்’..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம்…

மேலும் படிக்க

108 ஆம்புலன்சில் குவா, குவா..!!

திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர். பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்சில் சென்றபோது தீபாவுக்கு…

மேலும் படிக்க

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது..!!

சென்னை கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). இவர் வந்தவாசியை அடுத்த தேத்துறை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த திங்கள்கிழமை கோழிக்கறி வாங்க வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச் சாலையில் உள்ள குரும்பூரை சேர்ந்த மாலா நடத்தும் கோழிக்கறி கடைக்கு சென்றுள்ளார். இது குறித்து கோழி இறைச்சி கடை உரிமையாளர் மாலா வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அவர் சென்றபின்…

மேலும் படிக்க

பேரிடர் நிவாரண நிதி : தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு..!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இன்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு…

மேலும் படிக்க

அரசியலில் இருந்து விலகும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா..!!

கடந்த 2014ஆம் பிரயுத் ஓச்சா அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தவர். 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. எனினும், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கட்சித்தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு நேரமாக விலகுவதாக முடிவு செய்துள்ளேன். கட்சியின் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக்கொள்கையை முன்னெடுத்துச்செல்ல…

மேலும் படிக்க

டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது காணாமல் போன 17 வயது சிறுமியை சென்னை மீனம்பாக்கம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ரஞ்சித்தை பிடித்து அவரிடம் இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை திட்டம் : கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 17ம்…

மேலும் படிக்க

டெல்லியில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை..!!

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தி, சீரான விநியோகத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் அடிப்படையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் மத்திய அரசு…

மேலும் படிக்க

யமுனை நதியின் நீர்மட்டம் உயர்வு : டெல்லியில் 144 தடை..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டெல்லி போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் அச்சமின்றி பார்வையிட சென்றதாலும், யமுனை நதியின் நீர்மட்டம் 207.55 மீட்டராகப் பதிவானதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இடைவிடாத மழை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram