நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி விற்பனை..!!

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய உணவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதில் தக்காளி 1கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை…

மேலும் படிக்க

சென்னையில் அக்.8-ம் தேதி சைக்கிள் பந்தயம் ~ உதயநிதி ஸ்டாலின்..!!

ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சைக்கிளிங் போட்டியினை வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவர், பேசியதாவது: ஹெச்சிஎல் சைக்கிளிங் பந்தயம் வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறும். இந்த போட்டி மூன்று பிரிவுகளின் கீழ்…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ. 44,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.5,537-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து 79.50-க்கு விற்பனை…

மேலும் படிக்க

NEET & JEE முடிவுகள் 2023 ஆகாஷின் மாணவர்கள் தேசிய அளவில் முன்னணி..!!

ஆகாஷ் இன்ஸ்டிடியூட் NEET-UG மற்றும் JEE (Advanced) 2023 இல் அதன் சிறப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. NEET-UG இல் சிறந்த (தேசிய தர வரிசை) 10 AIR களில், ஆகாஷ் இன்ஸ்டிடியூட் வகுப்பறை திட்ட மாணவர்கள் (தேசிய தர வரிசை) AIR 3, 5, 6 மற்றும் 8ஆம் இடத்தை பெற்றுள்ளனர், இந்த மகத்தான சாதனை மாணவர்கள் மற்றும் நிறுவனம், இரு தரப்பினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. JEE (Advanced) வகுப்பறை பாடத்திட்டத்திலும், AIR…

மேலும் படிக்க

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ப்ரமோ வெளியீடு..!!

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  ‘’அதிருது மாமே’’…

மேலும் படிக்க

நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை : கோயம்பேடு மார்கெட்டில் ரூ.130க்கு விற்பனை..!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது. விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு  விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை…

மேலும் படிக்க

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து சட்ட ஆணையம் 46 லட்சம் கருத்துகள் பெற்றுள்ளது..!!

நாடு முழுவதிலும் அனைவருக்கும் சரிநிகரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்காக 22-வது தேசிய சட்ட ஆணையம் சார்பில் நாடு முழுவதிலும் கருத்து கேட்டு கடந்த ஜுன் 14-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறுபான்மையினர், பழங்குடிகள் மற்றும் இதர சமூகத்தினர் என பலரும் சட்ட ஆணையத்திற்கு தங்கள் கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு சட்ட ஆணையத்தால் பெறப்பட்ட கருத்துகள் இதுவரை 46 லட்சத்தை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கருத்துக்களை அனுப்ப வேண்டி…

மேலும் படிக்க

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம்…

மேலும் படிக்க

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது..!!

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார். இந்த ஆண்டு 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram