முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான செலவினங்களைப்…