திருச்சியில் ரெயில்கள் புறப்பட தாமதம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரெயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு…

மேலும் படிக்க

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம்

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தோ்வா்கள் தாங்கள்…

மேலும் படிக்க

தக்காளி விற்பனை செய்து 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த

நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர், ஒரு சில மாதங்களில் லட்சாதிபதியாகவோ அல்லது கோடீஸ்வரர்களாகவோ மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி (வயது 48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம்…

மேலும் படிக்க

திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது. பின்னர் 2-ந் தேதி…

மேலும் படிக்க

மராட்டியத்தில் வேன் மீது லாரி மோதல்

மராட்டிய மாநிலம் யவத்மாலில் உள்ள நாக்பூர்-துல்ஜாபூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை சோதனை செய்தனர். சோதனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்த மற்றொரு லாரி போலீஸ் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே போலீஸ் அதிகாரி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

மேலும் படிக்க

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை ~ மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்தன்.இவருடைய மனைவி சகுந்தலா,கணவன்,மனைவி இருவரும் அப்பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.வசந்தன் திருப்போரூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். திருட்டு சம்பவம் தொடர்பாக வசந்தன் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரையடுத்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் வசந்தனும்,சகுந்தலாவும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கழிப்பறை…

மேலும் படிக்க

புற்றுநோயால் அதிகளவில் உயிரிழக்கும் பெண்கள்..!!

நாட்டில் புற்றுநோய் இறப்பு விகிதம் ஆண்களிடையே ஆண்டுதோறும் 0.19% குறைந்து வரும் அதேநேரத்தில் பெண்களிடையே 0.25% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரு பாலினமும் சேர்த்து புற்றுநோய் இறப்பு விகிதம் 0.02% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2000- 2019-ம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில், 23 வகை புற்றுநோய்களால் மொத்தம் 1.2 கோடி மக்கள் இறந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கொச்சியில் உள்ள அம்ரிதா…

மேலும் படிக்க

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள சாம்சங் ‘போல்டபிள்’ ஸ்மார்ட்போன்கள்..!!

தென்கொரியாவைச் சேர்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி இசட் போல்டு 5, பிளிப் 5 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.அதில், கேலக்ஸி இசட் போல்டு 5, ஃப்ளிப் 5 ரக ‘போல்டபிள்’ மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, இந்த போன்கள் நொய்டாவில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்றே (ஜூலை 27) துவங்கிவிட்ட…

மேலும் படிக்க

‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ ~ ஹரியானா பெண் விவசாயிகளிடம் கூறிய ‘சோனியா காந்தி’..!!

ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று சந்தித்தனர். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதீனா கிராமத்திற்கு கடந்த 8-ம் தேதி சென்ற ராகுல் காந்தி, டெல்லிக்கு வந்தால் மதிய உணவு சாப்பிட தனது வீட்டிற்கு வருமாறு அங்குள்ள பெண் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதனையேற்று, மதீனா கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் தனி வேனில்…

மேலும் படிக்க

குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்: 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டு ஷியாமசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது.இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில், போதைப் பொருள் கடத்திய குற்றவாளி ஒருவரும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram