ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!
ஆடி மாதம் என்றாலே மக்கள் அனைவருக்கும் மனதில் தோன்றுவது தள்ளுபடி விற்பனையே. பொதுவாக ஆடிமாதங்களில் திருமணம் போன்ற எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இதன் காரணமாக ஜவுளி, தங்க நகைகள், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை மந்தமாகி தேக்கநிலை ஏற்படும். தேங்கிய பொருட்களை விற்பனை செய்யவும், தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விற்பனை செய்ய தேவையான புதிய ரகங்களின் முதலுக்கான நிதியை திரட்டுவதற்காகவும் வியாபார நிறுவனங்கள் தொடங்கியதே இந்த தள்ளுபடி விற்பனை….