ஆன்லைன் விளையாட்டு தடை சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை..!!

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசுத்தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அப்போது அவர்கள்,…

மேலும் படிக்க

உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என அறிவிப்பு..!!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தூணாக விளங்கியவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட உம்மன்சாண்டி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் உம்மன்சாண்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்….

மேலும் படிக்க

சீன நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்களின் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த 2 நாள் மாநாட்டில் நேற்று சீன நாட்டின் நிதி மந்திரி லியு குன்னுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் செயல்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அதில், பன்னாட்டு மேம்பாட்டு வங்கிகளை வலுப்படுத்துவது, உலக கடன் பாதிப்பு தன்மைகள் போன்றவை…

மேலும் படிக்க

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு..!!

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், இடர் படி 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதுதொடர்பாக தமிழக…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது.இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து 82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்…

மேலும் படிக்க

6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்து கொலை..!!

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றான். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க…

மேலும் படிக்க

‘ஜெயிலர்’ படத்தின் கதை லீக்..?!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது,   ‘ஜெயிலர்’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி கேங்ஸ்டர் ஒருவர் தனது கூட்டத்துடன் ஜெயிலில் இருந்து வெளியேற திட்டமிடுகிறார். அவர்களது திட்டத்துக்கு ஸ்டிரக்டான ஜெயிலர் தடையாக இருக்கிறார்….

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடி, மகனின் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை முடக்கம்..!!ரூ.81 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.81 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. மேலும், ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (2002) தமிழக உயர்…

மேலும் படிக்க

இந்தியா-பாகிஸ்தான் போட்டி : விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு..!!

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்த நகரிலுள்ள ஓட்டல்களின் பெரும்பாலான அறைகள் அந்த தேதிகளில் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. இந்நிலையில் போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு…

மேலும் படிக்க

பயனர்களுக்கு புதிய வசதி ~ ‘வாட்ஸ்அப் வெப்’ பில் சில முக்கிய மாற்றங்கள்..!!

வாட்ஸ்அப் வெப்பில் பயனர் அனுபவத்துக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது மெட்டா. சாட் ஷேர் ஷீட்டில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram