ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி..!!

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை கடந்த 14ல் முடிவடைந்தது. மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு…

மேலும் படிக்க

மீனவர்கள் விவகாரம் : கருணையுடன் அணுகப்படவேண்டும்..!!

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அதில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும்…

மேலும் படிக்க

பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்..!!

பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் உள்ள வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் சவுடு மணல் ஏற்றி வருவதாக திருவள்ளூர் துணை தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது முன்னிலையில் பெரியபாளையம் போலீசார் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சவுடு மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதனால் அந்த லாரிகளை…

மேலும் படிக்க

குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜெகன் நகரில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பணியினை தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொதுமக்கள், குடியிருப்பு சங்கத்தினர், அரசியல் கட்சியினர் வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது குடியிருப்பு…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது..!!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்….

மேலும் படிக்க

வேலூர் : பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழப்பு..!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ளஅள்ளேரி மலை பகுதியில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அதே பகுதியில் ஒன்றரை வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், தற்போது பாம்பு கடித்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர். தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில்…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து 82,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு…

மேலும் படிக்க

மணிப்பூர் வீடியோவை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது. இணைய தளங்களில் இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் செயல்படும்…

மேலும் படிக்க

வரும் 31ம் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம்..!!

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வரும் 31ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும்…

மேலும் படிக்க

‘தெறி’ இந்தி ரீமேக்கில் ‘கீர்த்தி சுரேஷ்’..!!

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ், ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அஜய்தேவ்கன் ஜோடியாக ‘மைதான்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருந்தார். அப்போது உடலை மிகவும் குறைத்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் அதில் பிரியாமணி நடித்தார். படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும் சினி 1 ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழில், ‘கீ’ படத்தை இயக்கிய…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram