மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!
மணிப்பூர் விவகாரத்துக்கு பல்வேறுதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், போராட்டம் நடைபெறுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர். 1,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த மே 4-ம்தேதி 2 பெண்களை ஆடைகளின்றிஅழைத்துச் சென்ற வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வீடியோ கடந்த…