மே.இ.தீவுகள் வீரர் ஜோஷ்வா டி சில்வாவின் அன்னையை சந்தித்த கோலி..!!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவின் தாயை சந்தித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அந்த சந்திப்பின் போது பரஸ்பரம் இருவரும் அணைத்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருந்தனர். கிரிக்கெட் உலகில் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச அரங்கில் ரன் வேட்டை ஆடி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விரிந்துள்ளது….

மேலும் படிக்க

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கே நேரடியாக சென்று தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியை சுற்றி சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பே கோபுரத் தெரு சந்திப்பு திரவுபதி அம்மன் கோவில் முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் தொடங்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த…

மேலும் படிக்க

நங்கநல்லூரில் மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு..!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் அருகே உள்ள உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் வேதிகா(வயது 15). இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சீருடையில் சைக்கிளில் சென்ற மாணவி அதன்பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தனது மகள் மாயமானதாக மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார…

மேலும் படிக்க

மூளையை தின்னும் அமீபா – அமெரிக்காவில் 2 வயது சிறுவன் பலி..!!

அமெரிக்காவில் 2 வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற நோய் தாக்கியது. இந்த நோய் பாதிப்பால் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக சிறுவனது தாய் கூறுகையில், கடந்த ஏழு நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் வாழும் அமீபா மூலம் இந்த மூளையை தின்னும் அரியவகை அமீபா என்ற நோய் பரவுகிறது….

மேலும் படிக்க

தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறிப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் காலில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் சென்றபோது, அந்த பெட்டியில் இருந்த 4 மர்ம நபர்கள் திடீரென ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை…

மேலும் படிக்க

டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!

டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக 3 தஜிகிஸ்தான் நாட்டினரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் கடந்த 21-ந்தேதி பயணிகளாக வந்தடைந்தனர். அவர்கள் 3 பேரும் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 48 வது பிறந்தநாளை வரும் நாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோவை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியிட்டது. தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக வெளியாக இருப்பது ‘கங்குவா’ படம். சூர்யா நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்….

மேலும் படிக்க

செய்தி எழுதும் திறன்கொண்ட கூகுளின் ஏஐ..!!

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாம். அது குறித்து பார்ப்போம். டெக் உலகில் அனைவரையும் பேச வைத்துள்ளது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவின் வரவு. சாட்ஜிபிடி தான் அதற்கான விதையை உலக அளவில் பரவலாக தூவியது. அதன் வழியில் கூகுள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் ஏஐ சாட்பாட்களை…

மேலும் படிக்க

மகாராஷ்டிரா, ம.பி.யில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறையும் : மத்திய அரசு தகவல்..!!

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரிப்பதால் வரும் காலங்களில் தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை சராசரியாக ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைக்கு விற்பனையானது. பருவமழை, கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளி பயிர்களை பாதித்த ஒயிட் ஃப்ளை நோய் மற்றும் இன்னபிற காரணங்களால் விலை தொடர்ச்சியாக ஏறி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram