‘நான் ரெடி தான் வரவா’ பாடலுக்கு நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீரர்..!!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் சென்ற மாதம்,…

மேலும் படிக்க

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு..!!

மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட,…

மேலும் படிக்க

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.15 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென அழிஞ்சிவாக்கம்-இருளிப்பட்டி சாலையில் நுழைந்து அருகே உள்ள ஏரிக்கரை வழியாக சென்றது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி இருந்தது. அந்த சேற்றில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரை மீட்க முடியாமல் அதில் இருந்தவர்கள் இறங்கி சென்று விட்டனர். இதற்கிடையில் அழிஞ்சிவாக்கம் ஏரிக்கரை…

மேலும் படிக்க

பூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலனஸ் மூலம்…

மேலும் படிக்க

டெல்லி யமுனை ஆற்றில் மீண்டும் அபாய எல்லையைக் கடந்த நீர்மட்டம்..!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் பல மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது. நேற்று இரவு…

மேலும் படிக்க

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி : தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின்..!! 

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடியால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுகுறித்து கேள்வி எழும்போதெல்லாம் ‘விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு…

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான/மிதமான மழைக்கு…

மேலும் படிக்க

கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலை செய்தது ஏன்..?!

சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுகந்தி (வயது 25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். 2017-ம் ஆண்டு இவர், போலீஸ் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர், கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் தனது தம்பி சுப்புராயனுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த சுகந்தி, சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்….

மேலும் படிக்க

படப்பிடிப்புக்காக குடும்பத்துடன் மணிப்பூர் சென்றுவிடாதீர்கள் : இயக்குநர் அமீர்..!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கலவரத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை தடுக்க முயன்ற…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram