குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!!
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்டண கழிப்பிடத்திற்கு என்று கழிவுகளை சேகரிக்க தனியாக தொட்டிகள் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் கழிவு நீர் தொட்டி…