சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் Pre Release தேதி அறிவிப்பு..!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன்…

மேலும் படிக்க

’போர் தொழில்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த குட்நைட் திரைப்படம் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரூ.5.5…

மேலும் படிக்க

27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை..!!

ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு  ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர்  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.  இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்…

மேலும் படிக்க

சோயப் அக்தருடன் செல்பி எடுத்து பகிர்ந்த சசி தரூர்..!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் துபாயில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்படும்போது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். விமான நிலையத்தில் அக்தருடன் நடந்த உரையாடல்களையும் பற்றி அவர் குறிப்பிட்டார். அதில், துபாய் வழியே டெல்லிக்கு திரும்பும் வழியில், என்னை சந்தித்து ஹலோ என்று சோயப் அக்தர் கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமடைந்தேன். என்ன ஒரு நேர்த்தியான மற்றும் இளம்…

மேலும் படிக்க

சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு பெரிய காலனி மேட்டு தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு சாலைகள் போடப்படாமல் நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் சாலை சேறும் சகதிகமாக மாறி வாகனங்கள் செல்லவே முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் மழை காலங்களில் சாலையில் செங்கற்களை…

மேலும் படிக்க

2 சட்டங்கள் மூலம் நாடு எவ்வாறு இயங்க முடியும்..!!

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல், பிரசார பணிகளை தொடங்கி விட்டன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருவரை சமாதானப்படுத்தோ மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்கான வழியை பின்பற்றப்போவதில்லை என்று பாஜக முடிவெடுத்துள்ளது. பொதுசிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும் கூறுகிறது. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை சிலர் எதிர்க்கின்றனர்….

மேலும் படிக்க

பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த 70 வயது மூதாட்டிக்கு, உதவிக்கரம் நீட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி..!!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது. இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரியான அனுக்ரிதி ஷர்மா, வயதான பெண்ணின் வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வந்த தருணத்தின் இதயத்தைத் தூண்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பல வருடங்களாக மின்சார வசதியின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி நூர்ஜஹானின் வீட்டிற்கு மின் இணைப்பை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐபிஎஸ் அத்காரி அனுக்ரித்தி ஷர்மா. அதுமட்டுமின்றி, காவல்துறை…

மேலும் படிக்க

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

29.06.2023 முதல் 01.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 27.06.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

மேலும் படிக்க

மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 ஏக்கர் பரபரப்பளவில் அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுஆராய்ச்சி மையம் என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ஓரம் இந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி அமைந்துள்ளதால் சந்தேக நபர்கள் யாரும் அதன் உள்ளே ஊடுருவாத வண்ணம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதேபோல் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர்களும் அணுஆராய்ச்சி மைய கடற்கரை பகுதியில்…

மேலும் படிக்க

காய்கறிகள் விலை ஒரே சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80-120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 -ரூ.68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணைப்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram