கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்..!!
காஞ்சிபுரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கொல்லச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நான்கு சாலை சந்திப்பில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ் தண்ணீர் வடிந்து கழிவுநீர் போல தேங்கியுள்ளது. அதில் நாய்களும், பன்றிகளும் உருண்டு, புரளுவதால் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் போல மாறி உள்ளது….