திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு..!!
திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை ஒன்றில், கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்செல்வி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், விஜயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில்,…