அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை: 156 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது..!!
சென்னை சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு 150 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் ‘இண்டிகோ’ பயணிகள் விமானம் நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்தமான் வான் எல்லையை விமானம் சென்ற போது, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இடி மின்னலும் அதிகமாக இருந்தது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. மேலும், மோசமான வானிலை சீரடையாததால், விமானி…