அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை..!!
புதுடெல்லி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஜூன் 5ம் தேதி மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பிபோர்ஜாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பிபோர்ஜாய்’ புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 6…