திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை : 100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன..!!
நாகப்பட்டினம் திட்டச்சேரி, திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சூறாவளி காற்றுடன் மழை திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏனங்குடி, திருப்புகலூர், ஆலத்தூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காற்றுடன் பெய்த இந்த மழையால்…