இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத ‘பாட் டேக்சி’ சேவை ~ உத்தர பிரதேசத்தில் செயல்படுத்த திட்டம்..!!
லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ‘ஜெவார் விமான நிலையம்’ கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் 4-வது மிகப்பெரிய விமான நிலையமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜெவார் விமான நிலையத்தை நொய்டா பிலிம் சிட்டியுடன் இணைக்கும் வகையில், ஓட்டுநர் இல்லாத ‘பாட் டேக்சி’ சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும் அதிநவீன போக்குவரத்து…