மணிப்பூர் தலைநகரில் மீண்டும் வன்முறை..!! பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல்..!!

இம்பால், மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி…

மேலும் படிக்க

காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது..!!

புகார்களின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார்…

மேலும் படிக்க

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜுன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்..!!

காஞ்சிபுரம் இதில் ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 80 மனுக்கள் பெறப்பட்டு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1…

மேலும் படிக்க

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!!

திருப்பூர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இ்ன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனத்தினர் தங்கள் வருகை மற்றும் தேவையான காலியிடங்கள் குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்….

மேலும் படிக்க

‘நீட்’ தேர்வில் 216 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி..!!

திருப்பூர் திருப்பூர், ஜூன்.16- திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 216 மாணவ-மாணவிகள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 216 பேர் தேர்ச்சி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்தார். முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழக மாணவர்கள் இடம் பிடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும்…

மேலும் படிக்க

பழச்செடி, மாடித்தோட்ட தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு..!!

திருப்பூர், தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்துக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை…

மேலும் படிக்க

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் : 27-ம் தேதி பிரசாரத்தை தொடங்கிறார் பிரதமர் மோடி..!!

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன. இம்மாநிலத்தை பொறுத்தவரை பல சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி பெண் வாக்காளர்கள் கையில் உள்ளது. இதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க பாரதிய ஜனதா…

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் தொல்லை : பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு..!!

முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான் தன்னை ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார். சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு…

மேலும் படிக்க

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தலாமா..?!!! அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன..??!!

புதுடெல்லி, இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக அமலாக்கப்பிரிவு இருக்கிறது. இன்று நாட்டில் அதிகாரமிக்க அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. சிபிஐ ஒரு மாநிலத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. ஆனால் அமலாக்கப்பிரிவுக்கு அப்படியெல்லாம் ஒரு அனுமதி என்பது தேவையில்லை. அமலாக்கத்துறை பி.எம்.எல்.ஏ. என்னும் கணக்கில் வராத கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதை தடுக்கும் சட்டம் 2002, பெமா எனப்படும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின்படியும் அதிகாரங்களை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram