புயலுக்கு மத்தியில் பூத்த மலர்கள்… குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்..!!
குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது கனமழை, பலத்த காற்றுக்கு இடையே எட்டு மாவட்டங்களை சேர்ந்த 707 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றெடுத்து உள்ளனர். போர்பந்தர், அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள்,…