தொடர் மழை: கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்..!!
சென்னை. சென்னை, செங்கல்பட்டு உள்ளிடட் மாவட்டங்களில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்தது வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் 50 மி.மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சென்னை, புறநகரில் பரவலாகப் பெய்த மழையால், காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது….