கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் ~ போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!
சென்னை, சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பனை, தென்னை மற்றும் பேரீச்சம்பழ மரங்களில் இருந்து இயற்கையான முறையில் கள் என்ற பானம் இறக்கி குடிக்கும் பாரம்பரியம் பழக்கம் உள்ளது. ஆனால், இந்த கள்ளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு, அதற்கு பதில் வெளிநாட்டு இந்திய மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. செயற்கையான, ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்த மதுவகையினால்…