மீண்டும் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா..!!

திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பு நடித்த சில படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் இருந்தது. அவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் வந்தன. இதனால் மார்க்கெட் சரிந்த நிலையில் இருந்த திரிஷாவை பொன்னியின் செல்வன் வெற்றி தூக்கி நிறுத்தியது. அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தற்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். த ரோடு படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் திரிஷாவை…

மேலும் படிக்க

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு..!!

ஒருவரே பல பான் அட்டைகளை பெற்றுக் கொண்டு, வரி கணக்கு தாக்கலில் மோசடி செய்து வந்தது வருமான வரித் துறைக்கு தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை பான் எண் வாங்கியவர்கள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறையின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பின்னர், அதற்கான காலக்கெடு அவ்வப்போது நீடிக்கப்பட்டது. அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி…

மேலும் படிக்க

தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடங்கும்..!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு…

மேலும் படிக்க

கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு..!!

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இதையடுத்து நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை…

மேலும் படிக்க

இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்..!!

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்….

மேலும் படிக்க

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சரிவு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.56 சரிந்து ரூ.43,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து 5,430-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 74.80க்கு…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் தவறு..!!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பதவி நீக்க…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.72 சரிந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைந்து 5,437-க்கும், சவரன் ரூ.43,496-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 75.30க்கு விற்பனை…

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..!!

முஸ்லிம்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக உள்ள பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக இறைவன் ஒரு ஆட்டை பலியிட கொடுத்ததையும் நினைவு கூர்ந்து தொழுகை நிறைவேற்றுகிறார்கள். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய…

மேலும் படிக்க

“கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடு தான்..!!”~ மு.க.ஸ்டாலின்..!!

“கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடுதான்…” திருமண விழாவில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram