காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – மீன்வளத்துறை அறிவிப்பு..!!

காரைக்கால், காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 45-65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதித்து காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

கனமழை எதிரொலி : தண்டவாளங்களில் தேங்கிய நீரால் 7 ரயில்களின் சேவை மாற்றம்..!!

நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு, திருப்பதி உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில்…

மேலும் படிக்க

நாளை மறுநாள் அமெரிக்கா செல்லும் ‘பிரதமர் மோடி’ ~ இந்திய வம்சாவளியினர் ஏமாற்றம்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார்.  21ம் தேதி அமெரிக்கா சென்றடையும் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் உள்ள புல்வெளியில் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கிறார். பின்னர் அடுத்த நாளான ஜூன் 22 அன்று , அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர்…

மேலும் படிக்க

இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இதுதான்..!! உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம்,…

மேலும் படிக்க

‘பதான்’ பட சாதனையை முறியடித்த ‘ஆதிபுருஷ்’..!! வெளியான மூன்று நாட்களில் ரூ.340 கோடி வசூல்..!!

தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான ஒரே…

மேலும் படிக்க

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு..!!

திருப்பூர் சேவூர்  சேவூரில் கோபி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதில் 450 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தினசரி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் வாகனங்களை பள்ளியின் முன்பு நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் ரோட்டிலேயே அங்கும், இங்குமாக நிறுத்துகிறார்கள். இச்சாலையானது கோபி செல்லும் பிரதான சாலை ஆகும். இதனால் அச்சாலை வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள்…

மேலும் படிக்க

மராட்டியம் : வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு..!!

மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தவுபிக் கான் (4), அலியா(6), அப்ரீன் கான்(6). இதில் தவுபிக் கான் மற்றும் அலியா இருவரும் உடன் பிறந்தவர்கள். அப்ரீன் கான் இவர்களின் உறவுக்கார பையன். இவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காவுக்கு 17-ம் தேதி விளையாட சென்றிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தைகளை தேடினர். குழந்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே…

மேலும் படிக்க

ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு காங்கிரஸ் வாழ்த்து..!!

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் ராகுல் காந்தி மிகவும் தைரியமான மற்றும் அச்சமற்ற தலைவர், இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மன்னிக்கவும், நம்பவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக…

மேலும் படிக்க

கனமழை எதிரொலி ~ நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா..??!!

நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய…

மேலும் படிக்க

இந்திய முஸ்லீம்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் கிடையாது ~ தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு..!!

மும்பை, அகமத்நகரில் சமீபத்தில் மத ஊர்வலத்தின் போது சிலர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படத்தை எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல அவுரங்கசீப்பின் படத்தை வாட்ஸ்அப் முகப்பு படமாக வைத்தவர் நவிமும்பையில் கைது செய்யப்பட்டார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அவுரங்கசீப்பின் கல்லறையில் மரியாதை செலுத்தியதற்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் அகோலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது அகோலா, சம்பாஜிநகர், கோலாப்பூரில் நடந்தது தற்செயலாக நடந்தவை அல்ல….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram