தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

பிரம்மதேசம் மின்வாரிய அலுவலகம் முன்பு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை செய்யாறு விவசாயம் செய்ய தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், விவசாயத்திற்காக தமிழக அரசு வழங்கும் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததை கண்டித்தும், மின் ஊழியர்களின் விரோத போக்கை கண்டித்தும் பிரம்மதேசம் மின்வாரிய துணை மின் நிலையம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயி பச்சையப்பன் தலைமை தாங்கினார். தமிழக கட்சி சார்பற்ற…

மேலும் படிக்க

மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிப்பு..!!

இம்பால், மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தடை இம்மாதம் 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்துள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் “நா ரெடி” பாடலின் ப்ரோமோ..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும்…

மேலும் படிக்க

குண்டு எறிதலில் புதிய சாதனை படைத்த தஜிந்தர்பால்..!! வெற்றியை 3 நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு அர்ப்பணித்தார்..!!

பாட்டி இறந்து 3 நாட்களே ஆன நிலையில் ஒடிசாவில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான தடகள போட்டியின் குண்டு எறிதல் பிரிவல் தஜிந்தர்பால்  டூர் தமது ஆசிய சாதனையை முறியடித்துள்ளார்.  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநிலங்களுக்கு இடையேயான (National Inter-State Championships) தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீரர் தஜேந்திரசிங் டூர் பங்கேற்றார். அவர் 7.26 கிலோ பிரிவில் 3வது வாய்ப்பில் 21.77 மீட்டர்  குண்டு எறிந்து தமது சாதனையை முறியடித்தார். அவர்…

மேலும் படிக்க

கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்..!!

காரைக்கால் காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி என்.ஐ.டி. நிறுவனத்தில் என்.சி.சி. மாணவர்களின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ராணுவ நடைபயிற்சி, துப்பாக்கி சுடுதல், சிறந்த ஒழுக்கம், தலைமை பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்த இந்திய கடலோர காவல் படையின் “அமயா” கப்பலை என்.சி.சி. மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது கப்பலின்…

மேலும் படிக்க

அரிக்கொம்பன் காட்டு யானையின் தற்போது நிலை என்ன..?? வனத்துறை அறிக்கை..!!

சென்னை, கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால்…

மேலும் படிக்க

புறவழிச்சாலை முழுவதும் மின்விளக்கு..!!

காரைக்காலில் புறவழிச்சாலை முழுவதும் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். காரைக்கால் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகளுடன், காரைக்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழிச் சாலையை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழிச்சாலையில் வாகனங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்வதால், சாலை முழுவதும் மின் விளக்குகளை உடனடியாக அமைத்து பயன்பாட்டிற்கு…

மேலும் படிக்க

‘தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது’ ~ ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம்..!!

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சென்னை, சென்னையை அடுத்த தாம்பரத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. “நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய். தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டிற்கு இன்று நான் வந்துள்ளேன்…

மேலும் படிக்க

மயிலாடுதுறை கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் – விவசாயிகள் மகிழ்ச்சி..!!

மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த அண்டு மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நீர், பல்லாயிரம் மைல்கள் கடந்து காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைந்தது. திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமன் ஆற்றுக்கு நீர் வந்தடைந்ததை அடுத்து, பாசன…

மேலும் படிக்க

2-வது திட்டத்தில் குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும்..!!

திருப்பூர் திருப்பூர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொங்குபாளையம் கிளை செயலாளர் அப்புசாமி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த பரமசிவம்பாளையம், மாரப்பம்பாளையம் புதூர், பள்ளிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய ஊர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 2-வது திட்ட குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5,6 மாதமாக குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் குழாய் உடைந்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram