புதிய யோசனைகளை வரவேற்று, பாதுகாத்து, நாட்டின் பன்முக தன்மையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள்: பிரதமர் மோடி..!!

புதிய யோசனைகளை வரவேற்று, அவற்றை பாதுகாத்து, நாட்டின் செழுமையான பன்முக தன்மையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நியூயார்க், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தில், பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து வெளியிட்டு உள்ள வீடியோ செய்தி ஒன்றில், யோகா வழியே ஒன்றிணைக்கும், தத்தெடுக்கும் மற்றும் தழுவி கொள்ளும்…

மேலும் படிக்க

நாளை பீகார் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) பீகார் செல்கிறார் நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சர்வதேச யோகா தினம்: துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் பங்கேற்பு..!!

கடலூர், உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது. நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. இன்றைய உலகில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரவலான வியாதியாக உருவெடுத்துள்ளது. யோகாவின் மூலம் இந்த வியாதியை…

மேலும் படிக்க

மாநில தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சி முடிவு..!!

புதுடெல்லி, இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். இதற்காக பல்வேறு மாநிலங்களில், கட்சியின் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விரைவில், தமிழ்நாடு, டெல்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்பட இருப்பதாகத்…

மேலும் படிக்க

சர்வதேச யோகா தினம்: ராமேசுவரத்தில் நீர் யோகா செய்த யோகா பயிற்சியாளர்கள்..!!

ராமேசுவரம், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டு 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம்…

மேலும் படிக்க

கவர்னருக்கு கருப்புக்கொடி – அரசியல் கட்சிகள் முடிவு..!!

சென்னை, தமிழகத்தில் கவர்னர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆர்.என்.ரவி கலந்துகொண்டு யோகா செய்தார். யோகா நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடலூர் வழியாக செல்லும்போது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி…

மேலும் படிக்க

போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

சென்னை, மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றியது இல்லை. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை பணிக்கு…

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு..!!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னை, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தற்போது நிறைவடைந்துள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்…

மேலும் படிக்க

மேற்குகரை: பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச்சூடு – 4 இஸ்ரேலியர்கள் பலி..!!

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும்,…

மேலும் படிக்க

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..!!

திருவண்ணாமலை ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மோசடி திருவண்ணாமலையை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் ஆன்லைன் மூலமாக கடன் தொகை பெற முயற்சித்து உள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. எண்ணையும் மோசடி நபரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்து 521-ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளனர். இதுகுறித்து குபேந்திரன் திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram