இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது..!!

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலக அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 13-ம் தேதி காலை தொடங்கிய சோதனை 14ம் தேதி அதிகாலை…

மேலும் படிக்க

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்..!!

காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகளை வாங்க ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டு சேலைகள் வாங்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் காஞ்சீபுரத்தில் குவிந்தனர். பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிக அளவிலானோர் வருகைதந்து பட்டு சேலைகளை வாங்கிச்சென்றனர். வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதன் காரணமாக காந்தி…

மேலும் படிக்க

லாரி மீது வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து ~ 7 பேர் உயிரிழப்பு..!!

காமசின் சாலையில் உள்ள பஹாடியா டாய் கோவிலுக்கு அருகே கல்லு என்ற சிறுவனுக்கு நேற்று இரவு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனது குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். வேகமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்பதால் கார் டிரைவர் 120 முதல் 130 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே…

மேலும் படிக்க

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 69). கடந்த 3 மாதங்களாக வசந்தா கழுத்து வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வசந்தா தனது உறவினர் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் பேரம்பாக்கம் அருகே உள்ள நர்சிங்கபுரம் பஸ் நிலையம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள்…

மேலும் படிக்க

போலி ஆவணம் மூலம் வங்கியில் ‘ரூ.1 கோடி’ கடன் பெற்று மோசடி..!!

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக இருப்பவர் சேதுராமன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், ‘சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49), மேடவாக்கம் பாபு நகர், 3-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (51), அவரது மனைவி முத்து லட்சுமி (46) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டனர். அவர்கள்…

மேலும் படிக்க

பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்..!!

பள்ளி மற்றும் கல்லூரியில்  கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம் கண்டிப்பானவர் என நினைத்த  ஆசிரியர்  கூட பள்ளி  இறுதி நாட்களில்  அவர்கள் காட்டும் அன்பு  ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி  தந்துள்ளார். இன்ஸ்டாவில் ஸ்டான்பெரி என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், …

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக..!! அஜித் அகர்கர்..?!

கடந்த 2021-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆண்கள் அணிக்கான தேர்வாளர்களின் தலைவரை தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறது.  தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு…

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு..!!

2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிய டி.ஜி.பி யாக பொறுப்பேற்பதற்கு முன்பாக சங்கர் ஜிவாலுக்கு அணி வகுப்பு மரியதை வழங்கப்பட்டது.  இதனை அடுத்து சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டின் 32 வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால்…

மேலும் படிக்க

வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் ‘சிவகார்த்திகேயன்’..!!

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும்…

மேலும் படிக்க

கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 53). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (57) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. கடந்த 18.2.2019 அன்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பரசுராமனை, பன்னீர்செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 17-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, பன்னீர்செல்வம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram