கோடநாடு கொலை வழக்கு: சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? நீதிபதி கேள்வி..!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரி, கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார்….