சர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவைக்க ஆசையா..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பொறித்த விஞ்ஞானிகள், அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். பல ஆயிரம் மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலம் மற்றும் விண்வெளியில் பூமியில் இருப்பதைப்போல் உணவுப்பொருள்கள் சுவையாக இருக்காது. எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல வாய்ப்பில்லை. உணவின் சுவையில் மணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் விண்வெளி வீரர்கள் வாசனையை அறிய முடியாமல் சுவையை இழக்கின்றனர். மேலும் விண்வெளியில் உணவு சமைப்பது ஒரு அரிதான நிகழ்வு ஆகும்….