‘இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது’ ~ கமலா ஹாரிஸ்..!!

அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதியும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன. இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை…

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை : அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது..!!

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக்கட்சி…

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது..!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்றுமுன் தினம் இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். அப்போது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது. இதனால் செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். அப்போது சிறுவனின் அழுகுரல் கேட்டது. சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள புதர் அருகே…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்..??!!

சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர்,எக்கோ, இசிஜி,மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் , காசநோய் உள்ளிட்ட நோய் தொடர்பான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. வருமுன் காப்போம் திட்டம் கடந்த 10 ஆண்டுகள்…

மேலும் படிக்க

ஆன்லைன் கடன் செயலி ~ டிஜிபி ‘சைலேந்திரபாபு’ எச்சரிக்கை..!!

சில காலமாக தமிழ்நாட்டில் கடன் செயலிகள் மூலம் பலரும் ஏமாற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தாங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பணத்தை செலுத்தாததால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கியது குறித்து தெரிவிப்பதாலும் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இது போன்ற கடன் செயலி மோசடிகளை தடுப்பது குறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்….

மேலும் படிக்க

‘அஜித்’ திரைப்பட நடிகை உள்பட பல யூ டியூப்பர்கள் வீடுகளில் ரெய்டு..!! கேரளாவில் பரபரப்பு..!!

நடிகை, யூ டியூபர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் ‘நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி’, ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘டபிள் பேரல்’, ‘பிரீத்தம்’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தும் பிரபலமானார். இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான…

மேலும் படிக்க

“மாமன்னன் படத்திற்கும் தேவர் மகன் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” ~ உதயநிதி ஸ்டாலின்..!!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி மாமன்னன் படத்தின்…

மேலும் படிக்க

அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு; 4.88 லட்சம் மக்கள் பாதிப்பு..!!

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களை சேர்ந்த 4.88 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அசாமில் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவும் மற்றும் இடி, மின்னலும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து…

மேலும் படிக்க

கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலி..!!

தச்சம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலியானார். தச்சம்பட்டு அருகே உள்ள கீழ்கச்சராபட்டு இருதயபுரம் பகுதியை சேர்ந்த ராஜி மகன் ரவி (வயது 27). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். திருவண்ணாமலை சாலையில் தென் மாத்தூர் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு ரவி படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்…

மேலும் படிக்க

தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த போது சரிந்த மேடை: பதற்றம் அடைந்த தொண்டர்கள்..!!

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மேடை சரிந்ததால் பரபரப்பு நிலவியது.  ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது.  இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  முக்கிய அரசியல்  கட்சிகளான ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம்,  ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் ஊருக்கு ஊர் மேடை போட்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஏழூரு மாவட்டம் பாத்துலவாரிகூடம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நேற்று  பொதுக்கூட்ட்ம நடைபெற்றது. அப்போது திடீரென பலத்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram