நாமக்கல் வாரச்சந்தையில் ‘ரூ.1 கோடிக்கு’ ஆடுகள் விற்பனை..!!

பக்ரீத் பண்டிகை பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். எனவே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்னால் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதிகாலை முதல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், கரூர், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்பட…

மேலும் படிக்க

சரித்திர படத்தில்..!! சூர்யாவுக்கு வில்லனாக ‘கே.ஜி.எப்.’ பட நடிகர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா 10 தோற்றங்களில் வருகிறார். அதிக பட்ஜெட்டில் எடுக்கின்றனர். நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். கங்குவா படம் முடிவதற்கு முன்பே ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக பேசி வருகின்றனர். திரைக்கதை எந்த படத்தின் சாயலும் இல்லாத வகையில் புதுமையாக இருக்கும் என்கின்றனர். இது சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த…

மேலும் படிக்க

திருமண வதந்திகள்..!! கீர்த்தி சுரேஷ் வருத்தம்..!!

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழில் அதிபரை மணக்க இருப்பதாக கூறினர். பின்னர் துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார். இதற்கு குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் திருமண வதந்திகள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எனக்கு திருமணமே செய்து வைத்து விட்டார்கள். ஏன் இப்படியெல்லாம்…

மேலும் படிக்க

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து..!! ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்..!!

பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது. இந்த பாலம் ஆனது கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வந்து உள்ளது. கட்டுமான பணியின்போது, மனித தவறால் தூண் இடிந்து விழுந்து உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் திட்ட இயக்குநர் அரவிந்த் குமார்…

மேலும் படிக்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்த முயற்சி..!!

திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தின் பயணிகளுக்குச் சொந்தமான உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது பயணி ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்த முயற்சித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க…

மேலும் படிக்க

திருமணமான மறுநாளே புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்..!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு (வயது 20) சோனி என்ற பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக வெட்டிக்கொன்றார். பின்னர்,…

மேலும் படிக்க

குஜராத்தில் பாலியல் துன்புறுத்தல்..!! வாலிபரை பெல்டால் அடித்து, துவம்சம் செய்த பள்ளி மாணவி..!! வைரலான வீடியோ..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தனது சகோதரியிடம் அந்த மாணவி கூறியுள்ளார். விஜய் சர்காதே (வயது 19) என்ற அந்த நபரை எதிர்கொண்டு, தண்டிப்பது என இருவரும் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, இளைய சகோதரி வழக்கம்போல்…

மேலும் படிக்க

‘அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்’ – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், உக்ரைனுக்கு எதிராக ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ படை போரிட்டு வந்தது. இந்நிலையில் ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு…

மேலும் படிக்க

மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது ‘கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு’ ~ சென்னை ஐகோர்ட்டு..!!

வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்கக்கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கணவர் கீழமை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படாததையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பாத்தியம்…

மேலும் படிக்க

‘அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் வெளிநாட்டில் போய் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று கவர்னர் கூறினார்’ ~ கனிமொழி எம்.பி..!!

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், “தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இங்கு இருக்கும் அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் வெளிநாடுகளுக்குச் சென்று பேசுவதில் எந்த பயனும் இல்லை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram