போதை பொருள் ஒழிப்பு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி..!!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போலீஸ் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு மணற்சிற்பம் மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், பாடகர்…