காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த வாரம் குைறந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் பெரிய வகை மீன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் தடைகாலம் முடிந்து…

மேலும் படிக்க

அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்..!!

தமிழக முதல்-அமைச்சரின் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஆவடி போலீஸ் கமிஷ்னர் அருண் உத்தரவின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4…

மேலும் படிக்க

கஞ்சா விற்ற தம்பதி கைது..!!

கோவை குறிச்சி பிரிவு பகுதியில் போத்தனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன் (வயது 30), அவருடைய மனைவி ஷபீனா (30) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா,…

மேலும் படிக்க

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!!

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர் அளித்த புகாரை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜூலை 7-க்குள் பதலளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஆணையை மீறி…

மேலும் படிக்க

சென்னை தலைமைச்செயலகம் அருகே தனியார் பஸ் விபத்து..!!

சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பஸ் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஆபிஸர் மெய்ஸ் நுழை வாயில் அருகே இருக்கும் 1500 கிலோ எடையுள்ள கல்லை தூக்கி எரிந்துள்ளது. பஸ்சின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. வேளச்சேரியில் இருந்து 13 பேரை ஏற்றிக்கொண்டு எண்ணூரில் உள்ள எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கொண்டு செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து…

மேலும் படிக்க

மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!!நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக…

மேலும் படிக்க

சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..!!

தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சிறப்பு முகாமில் அமைக்கப்பட்டு இருந்த ரத்த அழுத்தம், சிறுநீர், எக்கோ, இசிஜி, மார்பக புற்றுநோய், தொழுநோய், காசநோய் கருப்பைவாய் புற்றுநோய்…

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க தயக்கம் காட்டும் ஓடிடி நிறுவனங்கள்..!!

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்தில் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக…

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 முதல் 29 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்…

மேலும் படிக்க

தக்காளி கிலோ ரூ.57-க்கு விற்பனை..!!

திருப்பூரில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2 வாரங்களாக தக்காளி வரத்து மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் விலை அதிகாித்து கொண்டே செல்கிறது. அவ்வாறு திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் மொத்த விலையாக ரூ.43-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram