11 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை..!!பேத்தியின் பெயரை அறிவித்த சிரஞ்சீவி..!!

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். அதன்படி, குழந்தைக்கு ‘க்ளின்…

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் தொலைபேசியில் பேச்சு..!!

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன், வாக்னர் குழு பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக ‘மின்சார ஆட்டோ, மினிபஸ்’ சேவைகள் தொடக்கம்..!!

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார ஆட்டோ, மினிபஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கும் பல்வேறு இணைப்பு சேவைகளை ஏற்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு…

மேலும் படிக்க

கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!!

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் ரெயில் ஏறினார். சாதவாகனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்த அவர், கம்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காசிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் அவரது…

மேலும் படிக்க

மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது..!!

சென்னையில் இருந்து கவரைப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மின்சார ரெயிலில் சோதனை செய்யும்போது கேட்பாரற்று கிடந்த 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்தனர். போலீசார் அவற்றை மீட்டு ரெயிலில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பு..!!

காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கு தனியார் பஸ்சில் நேற்று வந்தார். பஸ்சில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலித்தது. சத்தத்தை குறைக்கும்படி கண்டக்டரிடம் கூறினார். இதை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து சினிமா பாடல் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பபட்டது. மீண்டும் ஒலியை குறைக்க கூறிய நிலையிலும் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அதனை அலட்சியப்படுத்தியதை தொடர்ந்து காஞ்சீபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு இது…

மேலும் படிக்க

மாமன்னன் படம் செய்த சாதனை..!!

உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங் வந்ததில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதி என்பதால்…

மேலும் படிக்க

மணிப்பூர் மக்களை சந்தித்த ‘ராகுல் காந்தி’..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தடுத்தி நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் மக்களை சந்தித்தது குறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மணிப்பூர் சகோதர சகோதரிகளின் துயரங்களைப் பார்க்கவும், கேட்கவும்,…

மேலும் படிக்க

மழை நேரத்துல இப்படி போனா, எப்படி இருக்கும்..??!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால், பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக மும்பையில் 2 வாரங்கள் தாமதமாக கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் பருவமழை துவங்கி இருந்தாலும், தொடங்கிய உடனேயே மழை நல்ல வேகமெடுத்துள்ளது. இதனால் மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு,…

மேலும் படிக்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த இரட்டைக்கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram