தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்புகள் பற்றிய பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை | DON’T BELIVE THE FAKE NEWS ABOUT METRO RAILWAY

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு…

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடி…

மேலும் படிக்க

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா |

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும்…

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி | இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் – பரூக் அப்துல்லா

இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க…

மேலும் படிக்க

ஜூன் மாதம் POSTER LOOK, ஜூலை மாதம் TEASER – ’கேப்டன் மில்லர்’ ‘CAPTAIN MILLER’

சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரண் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது….

மேலும் படிக்க

ACTOR VIJAY | பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பெறும் மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். ‘என்னுடைய வாக்காளர்கள் பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள்’ நாம் தமிழர் கட்சியை தொடங்கியபோது, சீமான் உதிர்த்த முத்துக்களில் இதுவும் ஒன்று. அது ஒருவகையில் உண்மையும் கூட. சீமானின் சூடு பறக்கும் செந்தமிழ் உரையை கேட்டதுமே வசியம் கொள்பவர்கள் அனைவரும் பதின்ம வயதை ஒட்டியவர்களே. ’அவர் அரசியலுக்கு கட்டாயம் வரவேண்டும்’ என்று சீமானால் அடிக்கடி வரவேற்புக்கு…

மேலும் படிக்க

வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு Match-ku ready ah? என்று டெல்லி கேபிடல்ஸ் அணி பகிர்ந்த Photo

சென்னை மற்றும் டெல்லி என இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். அதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்லும் வாய்ப்பை இந்த அணிகள் உயிர்ப்புடன் வைக்கலாம். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ததில் சென்னை 17 முறையும், டெல்லி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் முடிவில் இந்த வெற்றி கணக்கை மேலும் ஒன்று என கூட்டப்போவது யார் என்பது தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

மேலும் படிக்க

அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் | Chief Minister M. K. Stalin filed a defamation case against Annamalai

திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல்…

மேலும் படிக்க

திடீரென உயிரிழந்த பெண் சிவிங்கி புலி| 40 நாட்களில் 3ஆவது சம்பவம்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட தக்‌ஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது. இதன் மூலம் கடந்த 40 நாட்களில் மூன்றாவது சிவங்கி புலி உயிரிழந்திருக்கிறது. தக்‌ஷா என்ற பெண் சிவங்கிபுலி உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “தக்‌ஷா இன்று காலை காயமடைந்த நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து. தக்‌ஷா உடல் நிலையை கண்காணித்தனர். அதற்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் தக்‌ஷா…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram