வெப்பநிலை உயர்வால் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற மிகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, கடந்த ஆண்டில்தான் முதல் முறையாக அனைத்து நாட்களிலும் ஒரு டிகிரி அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 14.98 டிகிரி செல்சியஸ் என கணக்கிட்டுள்ளது. இது முந்தைய மிகவும் வெப்பமான ஆண்டான 2016-இல் பதிவான வெப்பநிலையை விட 0.17 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.வெப்பநிலை உயர்வால் ஏற்படும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் நம்மை மட்டும் அல்லாமல், நம்முடைய வரும் தலைமுறையினரையும் பாதிக்கும். கடந்த ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 7 மாதங்களுக்கு எப்போதும் இல்லாத அளவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
2023 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கிறது..!!
Please follow and like us: