நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து ~ 7 மீனவர்கள் மீட்பு..!!

Spread the love

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகை, மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.

நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.

இந்த நிலையில், இன்று நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகைக்கு நேர் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 7 மீனவர்கள் சுமார் 3 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்தனர். உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் சக மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 4 பேர் ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் கடலில் கவிழ்ந்த விசைப்படகுகளை மீட்கும் பணியில் 2 பைபர் படகுகள், 12 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram