கஜகஸ்தான் நாட்டில் 16 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீப் பற்றி எரிந்த கட்டடத்தில் இருந்து 300 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காயமடைந்த 16 குழந்தைகள் உள்பட 31 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது 5வது மற்றும் 6வது தளத்தில் இருந்த சிலர் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து கீழே வீசினர். தாங்களும் மாடிகளில் இருந்து குதித்தனர். அவர்களை கீழே நின்றிருந்த பொதுமக்கள் போர்வை மற்றும் மெத்தைகள் கொண்டு அவர்களை லாவகமாகப் பிடித்து காப்பாற்றினர்.
NEWS EDITOR : RP