12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகளை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் மொத்தம் 7533 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.80 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதம், தனியார் பள்ளிகள் 99.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 94.39 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 87.79 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.04 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 2767 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326.