பிரிட்டனைச் சேர்ந்த மானெட் பெய்லி என்ற பெண்மணி தனது 102 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சுமார் 2100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். மேலும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்த முயற்சி சற்று பயமாக இருந்ததாகவும், ஸ்கை டைவிங் போது தமது கண்களை இறுக மூடிக் கொண்டதாகவும் பெய்லி தெரிவித்துள்ளார். மேலும் தனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Please follow and like us: